
கூகுல் எர்த் சாப்ட்வேர் மூலம் தெரிய வந்துள்ள காதல் தீவு ஒன்று இன்டெர்நெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.செயற்கைக்கோள் படமாக உலகின் பரப்பை அங்குலம் அங்குலமாக இன்டெர்நெட் மூலம் அலசி பார்க்க வழிசெய்யும் கூகுல் எர்த் சாப்ட்வேர் சேவை எத்தனையோ விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தீவிரவாதிகள் தங்கள் சதிதிட்டத்திற்காக இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்வதாகவும் புகார் உண்டு.இந்நிலையில், இந்த சாப்ட்வேரின் உதவியோடு ஏட்ரியாட்டிக் கடல் பகுதியில் காதல் தீவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குரோஷியா நாட்டின் கடற்கரை அருகே உள்ள தீவு தனியார் ஒருவருக்கு சொந்தமானது.இந்த தீவு காதல் சின்னமான இதயத்தை போலவே அமைந்திருக்கிறது. இந்த விஷயம் அதன் உரிமையாளருக்கே இத்தனை காலமாக தெரியாதாம்.கூகுல் எர்த் மூலம் இந்த காதல் தீவை பார்த்து வியந்தவர்கள் அங்கு தங்க அனுமதி கேட்டு அவரை தொடர்பு கொண்டு வருகின்றனராம்.இதன் மூலமே அவருக்கு தனது தீவு காதல் தீவாக காட்சி தருகிற விஷயம் தெரிய வந்திருக்கிறதாம்.அந்த தீவு ஆளில்லாத தீவாக இருப்பதால் காதலர்கள் வந்து தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.எது எப்படியோ இன்டெர்நெட் உலகில் இந்த காதல் தீவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
No comments:
Post a Comment