Tuesday, January 27, 2009

கவுதம புத்தர் பிறந்த இடம் எது?



பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த, "சாந்தினி
சவுக்' படத்துக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தர்
பிறந்த இடம் பற்றி படத்தில் தவறான வசனம் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, இந்தியாவிலும் அதற்கு தடை விதிக்க வேண்டுமென நேபாள அரசு வலியுறுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த, "சாந்தினி சவுக் டூ சீனா'
என்ற படம் சமீபத்தில் வெளியானது. நேபாளத்திலும் சில இடங்களில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தில் கவுதம புத்தர் இந்தியாவில் பிறந்ததாக ஒரு வசனம் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, நேபாளத்தில் போராட்டம் வெடித்தது. அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அந்த படத்தை
நேபாளத்தில் திரையிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவிடமும் நேபாள அரசு சார்பில் அதிருப்தி
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் தகவல் தொடர்பு அமைச்சர் கிருஷ்ண பகதூர் மகரா கூறியதாவது: உண்மையில் கவுத புத்தர், நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். ஆனால், "சாந்தினி சவுக்' படத்தில் அவர் இந்தியாவில் பிறந்ததாக வசனம் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக, அந்த படத்துக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் சார்பில் இந்தியாவிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு மகரா கூறினார்.
நேபாள பத்திரிகையாளர் பிரல்கத் ரிஜால் கூறுகையில், "இந்த
படத்தில் இடம் பெற்றுள்ள வசனம், நேபாள மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. உலகின் மற்ற இடங்களில் இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக, அந்த வசனத்தை நீக்குவதற்கு படத்தின் தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

1 comment:

Unknown said...

எண்ணில் புத்தர்கள் இருந்ததாக தகவல்கள் உள்ளன. இறுதி புத்தரின் வரலாறு தெளிவானதாக இல்லை. அவர் பிறந்த இடம் அத்திமரக்காடுகள் நிறைந்த பகுதி எனத்தெரிகிறது. சோழரின் அடையாள மாலை அத்தியே! எனவே இறுதிப்புத்தர்களாக இருந்தோருள் சிலர் சோழராக இருக்கலாம். ஆயினும் சூரியகுலச்சோழர், சந்திரகுலத்தோரால் சிறுகச்சிறுக பாரதத்தின் தென்கிழக்கு மூலையில் முடக்கப்பட்டுள்ளனரே! இந்நிலை அலெக்சந்தாக்களின் வரவுக்காலம் முதலாக தொடங்கியிருக்கவேண்டும்.