Tuesday, January 27, 2009

மொபைல்போன் படுத்தும் பாடு :



ஆஸ்திரேலியாவில் மொபைல் போன் வைத்திருப்பவர்களில்,
50 சதவீதத்தினர், அதை கழிவறையிலும் பயன்படுத்துவது, ஆய்வில் தெரியவந் துள்ளது. ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தைவான் நாடுகளில், "மைக்ரோ சாப்ட்' நிறுவனம் நடத்திய ஆய்வில்
தெரியவந்துள்ள முடிவுகள் குறித்த விவரங்கள் வருமாறு:
ஆஸ்திரேலியாவில் மொபைல் போன் வைத்திருப்பவர்களில் இருவரில் ஒருவர், அதை கழிவறையில் உட்கார்ந்து கொண்டு பயன் படுத்துகின்றனர். மொபைல் போன் வைத்திருப்பவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர், தங்கள் காதலை அதன் மூலம் தெரிவிக்கின்றனர். சீனாவில்
66 சதவீதம் பேர், கழிவறையில் உட்கார்ந்தபடி மொபைல் போன்களில் பேசுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக 80 சதவீதம் பேர், தாங்கள் சாப்பிடும் போதும் கூட மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். 62 சதவீதம் பேர் வாகனம் ஓட்டும் போதும், தூங்கப் போகும் போது கூட 48 சதவீதத்தினரும் மொபைல் போன்களில் பேசுவதாக தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியர்களை
பொறுத்தவரை, அடிக்கடி மொபைல் போன்களை மாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

No comments: