
தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூரில் ஒர்க்ஷாப் வைத்திருப்பவர் தங்கம். இவரது ஒர்க்ஷாப் முன்பு விநோத பறவை ஒன்று, காலில் அடிபட்டு கிடந்தது.கிராமப்புறங்களில் நாமக்கோழி அல்லது உள்ளான் என்று அழைக்கப்படும் இது புறா போல் தோற்றம் உடையது. இதன் அலகுகள் ஆரஞ்சு நிறத்திலும், நுனி அலகு மஞ்சள் நிறத்திலும் காணப்படும். நீர் நிலைகளில் மட்டுமே வாழும் இது, வேடந்தாங்கல் அல்லது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இருந்து வந்திருக்கலாம். ஆங்கிலத்தில் ‘‘காமன்கூட்” என்றழைக்கப்படும் இந்த பறவைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த தங்கம், பின்னர்தூத்துக்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அவர்கள் அந்த பறவையை வல்லநாடு காட்டுப் பகுதியில் கொண்டு போய் விடப் போவதாக தெரிவித்தனர்
No comments:
Post a Comment