Thursday, April 21, 2011

இளவரசர் வில்லியம் கதே திருமண நினைவு முத்திரைகள்


இளவரசர் வில்லியம் கதே அரச திருமணத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் றோயல் மெயில் (Royal Mail) புதிய முத்திரைகளை வெளியிட்டுள்ளது.
அரச தம்பதியினரின் உத்தியோகபூர்வ திருமண நிச்சயதார்த்த வைபவத்தின்போது பிரபல புகைப்படக் கலைஞரான மைரோ டெஸ்டினோ
(Mairo Testino) வினால் எடுக்கப்பட்ட உருவப்படங்களையே இந்த முத்திரைகள் கொண்டு விளங்குகின்றனவாம். அவரின் கைவண்ண தொழில் நுட்பத்தில் உருவான தம்பதிகளின் படமானது முதற் தர 1.10 பவுண் பெறுமதியான முத்திரையாகப் போகிறதாம். இந்த முத்திரைகள் யாவும் இரண்டாம் எலிஸபெத் மகாராணியாரின் பிறந்த தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள.
அரச தம்பதியினரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் திருமண ஞாபகார்த்த முத்திரை வெளியீடானது மகாராணியின் பேரப்பிள்ளைகளின் ஒருவரின் திருமணத்தைக் குறித்த முதலாவது நிகழ்வாகும்.றோயல் மெயில் பணிப்பாளர் ஸ்ரீபன் அகார் இது பற்றி விபரிக்கையில்,இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்திரை வெளியீட்டை நடாத்துவதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவதுடன் இந்த முத்திரைகள் இங்கிலாந்தில் மட்டுமின்றி உலகம் பூராவும் பிரபல்யம் பெற்று விளங்குமென நம்புகிறோம்'' எனக் கூறியுள்ளார்.அதே சமயம் இளவரசர் வில்லியம்இதற்கு முன்னரும் இரு தடவைகள் கீணிதூச்டூ Mச்டிடூ இன் முத்திரைகளில் தனது முகத்தைக் காட்டியுள்ளார். அதாவது மகாராணியின் தாயாரின் 100 ஆவது பிறந்த தின (ஆகஸ்ட் 4, 2000) முத்திரையிலும் கடந்த 2003 இல் நடந்த தனது 21 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்திரையிலும் அவர் தோன்றியுள்ளார். இப்புதிய முத்திரைகள் இரண்டு முதல் வகுப்பு முத்திரைகளாகவும் இரண்டு 1.10 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியõன முத்திரைகளாகவும் உள்ளமை கவனிக்கத்தக்கது. நேற்று 21 ஆம் திகதி முதல் இப்புதிய முத்திரைகள் தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ளதுடன், இவற்றுக்கான கட்டணங்கள் கடந்த ஏழாம் திகதி முதல் றோயல் மெயிலின் இணையத்தளம் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.அத்துடன் 1981 இல் நடந்த இளவரசர் வில்லியமின் பெற்றோராகிய இளவரசர் சாள்ஸ் இளவரசி டயானா திருமணத்தின் போதும் இத்தகைய திருமண நினைவு முத்திரைகளை றோயல் மெயில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.உலகம் பூராவும் அஞ்சலாக்கப்படும் 20 கிராம் எடை வரையான அனைத்து கடிதங்கள் அட்டைகளுக்கும் இப்புதிய 1.10 பவுண் பெறுமதியான முத்திரைகள் பாவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெட்ரோநியூஸ்22/04/11

No comments: