Monday, March 9, 2009

குப்பையில் கிடக்கும் 'தங்கத்தாய்'


தெருக்களில் கிடக்கும் குப்பைகளை சேகரித்து தனது மலைபோல் குவித்து வைத்துள்ளார் ஒரு மனநிலை பாதித்த பெண். குப்பைகள் உள்ள வீட்டிற்குள்ளேயே சமையல் செய்து, சாப்பிட்டு தூங்குகிறார். தேனி மாவட்டம், கூடலூர் ஞானியர் கோனார் தெருவில் வசிப்பவர் தங்கத்தாய் (30). இவர் 10 வயது வரை நல்ல வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்து மனநிலை பாதிப்பிற்குஉள்ளானார். தற்போது தனது வயதான தாய் எல்லம்மாவுடன் வசித்து வருகிறார். 5 ஆண்டுகளாக தெருக்களில் கிடக்கும் குப்பைகளை எடுத்து தனது வீட்டிற்குள் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் வீட்டிற்குள் போடும் குப்பைகளை தனது தாய் உட்பட யார் வந்து அகற்றினாலும் அவர்களை அடிப்பதும், விரட்டுவதுமாக யாரும் குப்பைகளை அகற்ற முன்வரவில்லை. சிறிது சிறிதாக சேகரிக்கும் குப்பைகள் வீட்டிற்குள் அதிக அளவில் தேங்கி விடுகிறது. கூடலூர் நகராட்சி நிர்வாகத்தினர் 2 மாதத்திற்கு ஒரு முறை மனநிலை பாதித்த பெண்ணை சமாதானம் செய்து வீட் டிற்குள் குவிந்து கிடக்கும் குப்பைகளை மிகுந்த சிரமத்துடன் அகற்றி வருகின்றனர். தெருக்களில் கிடக்கும் குப்பைகள் மட்டுமின்றி சாக்கடையில் இருக்கும் குப்பைகளையும் வீட்டிற்குள் போடுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளுக்கு உள்ளேயே அவரது தாய் சமையல் செய்கிறார். இவர்கள் இருவரும் சாப்பிடுவதும், இரவு நேரத்தில் தூங்குவதும் இந்த குப்பையில் தான்.மனநிலை பாதித்த பெண்ணுக்காக அவரது வயதான தாய் படும் சிரமம் பார்ப்பவர்களை நெகிழச் செய் துள்ளது. சில மாதங்கள் ஏர்வாடியில் இருந்த இப்பெண் அங்கு தீப்பிடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் மீண் டும் கூடலூருக்கு வந்து விட்டார். குப்பையில் கிடக்கும் தங்கத்தாயை மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க ஏதாவது ஒரு தொண்டு நிறுவனம் முன்வராதா என அவரது வயதான தாய் ஏக்கத்தில் உள்ளார்.

1 comment:

"உழவன்" "Uzhavan" said...

uzhavanஅடடா.. யெப்பா தேனி மாவட்டத்துக்காரங்களா.. எதாவது உதவி பண்ணுங்கப்பா..

pls remove word verification.