Sunday, May 20, 2012

கோடைகால வெப்பத்தை தணிக்க்கும் மார்புக்குளிரூட்டி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தக் கோடைக்காலத்தில் பெண்களுக்கு இதமளிக்கும் வகையில் உள்ளாடையொன்று தயாரிக்கப்பட்டு, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைசிறந்த உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான "ட்ளம்ப்' நிறுவனத் தயாரிப்பான ""Super Cool Bra'' (அதிசிறந்த குளிர்ச்சிதரும் மார்புக்கச்சை) தலைநகர் டோக்கியோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அற்புதமான குளிர்ச்சி தரும் மார்புக்கச்சில் ஜெல்மெத்தைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஜெல் மெத்தைகளை[ Gel pads ]குளிரூட்டியில் இரண்டு மணி நேரம் வைத்த பின்னர், பெண்கள் தங்களின் மார்பகங்களுக்குள் செலுத்தியவுடன் அவர்கள் இது கோடை காலம் என்பதையே மறந்து விடுவார்களாம். அந்தளவுக்கு அதி நவீனமான முறையில் இந்த மார்புக்கச்சு (Brassiere] தயாரிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் வேறுபட்ட வகையில் மகளிரின் மார்பகங்களைக் குளிரச்செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மார்புச் கச்சு இரண்டு வேறுபட்ட கண்கவர் வர்ணங்களில் வெளிவந்துள்ளதுடன், புதினா கீரை வாசம் கலந்த புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் வழங்கும் சிறிதளவிலான காற்றோசை கொண்டதாகவும் காணப்படுவதாக இதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிசய மார்புக்கச்சின் இரண்டு கிண்ணங்களும், மீனொன்றுக்கும் கடல்தாவரக் கோலத்திற்கும் பின்னால் நீல நிறமுடைய ஜெல் மெத்தைகள் கொண்ட மீன் வளர்ப்புக்கிண்ணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இத்தகைய குளிரூட்டும் ஜெல்மெத்தைகள் தமது வித்தைகளைக் காண்பிக்க வில்லையெனில், இதனை அணிந்துகொள்வோர், தங்கள் மேனியில் நீரைத் தெளித்துக்கொள்ளும் வகையில் மார்பு கச்சில் அமைக்கப்பட்டுள்ள சிறியளவு மூங்கிலால் செய்யப்பட்ட குழிவுள்ள கரண்டியை அல்லது கைவிசிறியைத் தெரிவு செய்து பாவித்துக்கொள்ளலாம். மொடல் அழகிகளால் செய்துகாட்டியது. இதற்கு முன்னர் எப்போதுமே செய்யப்பட்டிருந்ததை மூங்கில் திரைகொண்டதும், நுளம்பு வலை கொண்டதுமான குட்டைப் பாவாடையுடன் பெண்கள் தங்கள் மேனியின் அரைவாசிப் பகுதிவரை இதனைப் பாவிப்பதன் மூலம் குளிர்ச்சியை அனுபவித்தும் கொள்ளலாம். ஆயினும், இத்தகைய அதிசய மார்புக்கச்சு விற்பனைக்கு விடப்படப் போவதில்லையெனவும் ஜப்பானில் குளிரூட்டிச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டே இவை தயாரிக்கப்டடுள்ளதாக, உள்ளாடைகள் தயாரிப்பு ஜாம்பவனாகத் திகழ்ந்து வரும் ட்ராய்ம்ப் ( Triamph International) நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் கடந்த வருடம் மார்ச் மாதம் புகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை அனர்த்தத்தை தொடர்ந்து நாடு ஏராளமான மின்சக்தி பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. ""ட்ராய்ம்ப்'' நிறுவன பேச்சாளரான யொஷிகோ மசுடா இதுகுறித்து தெரிவிக்கையில், முழு நாடும் குறிப்பாக "கன்சாய்' ((Kansai) பிராந்தியம் மின்சாரத் தட்டுப்பாட்டால் அவதிப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனங்களும், நாட்டு மக்களும் தற்போது இல்லையென்றளவுக்கு அதிகூடிய மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் மின்சார சேமிப்பை ஊக்குவிக்க வே நாம் இதனை அறிமுகம் செய்திருக்கிறோம் என்றார். ""ட்ராய்ம்ப் இன்டநெஷனல்'' ( Trlumph International) நிறுவனமானது ஜேர்மனியில் கடந்த 1886இல் ஸ்பைஷோபர் புரோபன் ஆகிய இரு குடும்பங்களால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச உள்ளாடைகள் உற்பத்தி நிறுவனமாகும். சுவிற்ஸர்லாந்தின் ஸர்ஸாக் ((Zurzach) நகரில் இயங்கி வரும் அதன் முதலாவது வெளிநாட்டு துணை நிறுவனமே தற்போது அதன் தலைமையகமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது 120 நாடுகளில் செயற்பட்டு வரும் இந்த மாபெரும் நிறுவனம், உலகின் உள்ளாடை உற்பத்தி முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இந்நிறுவனம் 2.2 பில்லியன் சுவிஸ் பிராங்கை வருடாந்த வருமானமாகப் பெற்று வருவதுடன் உலகளாவிய ரீதியில் 36,500 பணியாளர்களையும் கொண்டு வீறுநடை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மெட்ரோநியூஸ் 13/05/12

No comments: