Saturday, May 12, 2012

சர்ச்சையில்சிக்கிய மொடல்

ஹொலிவூட் திரைப்பட உலகில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையும் வடிவமைப்பாளருமான கிம் கர்டாஷியனின் முன்னாள் காதலரான நடிகர் ரேய் ஜே அவுஸ்திரேலிய பிரபல நடிகை சோபிக் மொங் (sophie mong ) குடன், சுகந்தம் வீசும் புதிய வர்த்தகப் பொருள் விற்பனை ஊக்குவிப்புக்கான படப்பிடிப்பொன்றில் மிகவும் நெருங்கிய நிலையில் தோன்றியுள்ளார். பிரின்ஸ் ரெய்ன்ஸ்[ prince reigns ) எனும் வர்த்தக நாமங்கொண்ட சவரம் செய்வதற்குப் பாவிக்கப்படும் திரவகமொன்றிற்கான (shaving serum) விற்பனை ஊக்குவிப்பு சம்பந்தமான விளம்பர படப்பிடிப்பின்போது 31 வயதான நடிகர் ரேய் ஜே (rayj) காண்போரை ஒரு கணம் கிறங்க வைக்கும் திறந்த மார்பகங்களைக் கொண்ட 32 வயதான அவுஸ்திரேலிய நடிகையான சோம்பி மங் (sophie monk) மீது ரோஜாப் பூவிதழ்களைத் தூவிய நிலையில் அவர்கள் இருவரும் நீர்த்தடாகமொன்றில் ஒன்று சேர்ந்து குதித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்தனர். மேற்படி வர்த்தக நாமத்தின் புதிய முகங்களாக அவர்களிருவரும் விளங்குவதற்கென அவர்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பேரழகி கிம்மின் வசைப் பெயர் பெற்றுள்ள ஆபாச ஒளிநாடாக்களில் தோன்றி நடித்துப் பிரபல்யமடைந்துள்ள நடிகர் ரேய் ஜே ஹொலிவூட் திரையுலக பிரபல பாடகியாகத் திகழ்ந்து கடந்த பெப்ரவரி 11 அன்று பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் குளியல் தொட்டியொன்றில் இறந்த நிலையில் காணப்பட்டிருந்த விட்னி ஹுஸ்டனுடன் நெருங்கிய உறவை வைத்திருந்து பின்னர் அதனை உதறித்தள்ளியமையும் அனைவரும் அறிந்த விடயம்.
மேற்படி சவரம் செய்ய பயன்படும்prince reigns எனும் திரவபாக விற்பனை ஊக்குவிப்புக்கான விளம்பரப் படப்பிடிப்பு நடிகர் ரேய் ஜேயின் வீட்டில் இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்ததுடன் அங்கு நடிகை சோபியின் பிரசன்னம் பற்றி ஆரம்பத்தில் அவர்கள் இருவரையும் பற்றிப் கிசு கிசுப்பு வதந்தியாகவே பரவியதாம். இது குறித்து நடிகை "குளோபல் கிறின்ட்' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது விட்னி ஹுஸ்டனின் முன்னாள் காதலரின் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டாயா? என எனது தாயார் அவுஸ்திரேலியாவிலி ருந்து. காலை 8.30 மணியளவில் கேட்ட போதுதான் நான் அமெரிக்காவில் இருந்ததை உணர்ந்தேன். ஆயினும், உண்மையைச் சொல்வதாயின் நான் ரேய் ஜேய் ஜே யின் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டதாகக் கூறினேன். ஆயினும் அங்கு prince reigns க்கான புதிய விற்பனை ஊக்குவிப்பு மொடலிங் ஒன்றுக்காகவே நான் உண்மையில் நான் அங்கிருந்தேன். கடந்த வருடம் தீவிரமாக உடலின்பம் தேடுதல் பற்றிய சஞ்சிகையின் அட்டைப் படம் மற்றும் உள்ளே இருக்கும் படங்களுக்கான நிர்வாணக் கோலங்காட்டவென ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க அச்சஞ்சிகை வெளியீட்டாளர்கள் முன்வந்த போதிலும் அதனை நடிகை சோப்பி நிராகரித்திருந்ததுடன் இத்தகைய செயலானது ஹொலிவூட் திரையுலகத்தில் தடம் பதிக்கும் தனது சந்தர்ப்பங்களை இல்லாமற் செய்துவிடுமெனவும் கூறியிருந்தார். கிளிக் ((click) மற்றும் டேற்மூவி (date movie) ஆகிய நகைச்சுவைப் படங்களில் பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்த நடிகை மொங் good charlotte திரைப்பட நடிகர் பென்ஜி மடெனுடன் (benji madden) இதற்கு முன்னர் திருமணப்பதிவு செய்து கொண்டார். கடந்த 2010ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோன் டயஸுடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆயினும், சத்திர சிகிச்சை நிபுணர் வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை நேரில் பார்த்து அவர் தனது கணவரை விவாகரத்துச் செய்தார். அதனையடுத்து கடந்த அமெரிக்க கோடீஸ்வரரான ஜிம்மி எஸ்பக்குடனான (jimmy Esebag) குறுகிய காலத் திருமண நிச்சயதார்த்தத்திற்கும் சோம்பி முற்றுப்புள்ளி வைத்தமை குறிப்பிடத்தக்கது. மெட்ரோநியூஸ் 12/05/12

No comments: