பல்கேரியாவில் 11 வயது சிறுமியொருவர் குழந்தையொன்றுக்குத் தாயாகியுள்ளாள். கோர்டெஸா எனும் இச்சிறுமி 19 வயதான தனது நண்பர் ஜெலிஸ்கோ திமித்ரோவுடன் நெருங்கிப் பழகியதால் கர்ப்பமடைந்தாள். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோர்டெஸாவுக்கும் ஜெலிஸ்கோவுக்கும் கடந்த 22 ஆம் திகதி காலையில் திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் மாலையில கோர்டெஸா பெண் குழந்தையொன்றை பெற்றாள். அக்குழந்தைக்கு வயலேட்டா எனப் பெயரிடப் பட்டுள்ளது.பல்கேரியாவில் 13 14 வயதில் பெண்கள் தாயாகுவது சாதாரணமானதாம். ஆனால் உலகின் மிக இளமையான தாய் கோர்டெஸா எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான் இதுவரை பொம்மைகளை வைத்து விளையாடிவந்தேன். இப்போது எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளை மிகவும் நேசிக்கிறேன்.
இனி நான் பாடசாலைக்குச் செல்லப்போவதில்லை. இப்போது நான் தாயாகிவிட்டேன் என்கிறாள் கோர்டெஸா.
ஆனால் கோர்டெஸாவின் கணவரான ஜெலிஸ்கோ திமித்ரோ சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டின் காரணமாக சிறைத்தண்டனைக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. நான் முதன் முதலில் கோர்டெஸாவை சந்தித்தபோது அவளுக்கு 15 வயது இருக்கலாம் என எண்ணினேன். தனக்கு 11 வயதுதான் என அவள் கூறவில்லை என்கிறார் திமித்ரோ.
No comments:
Post a Comment