Wednesday, July 22, 2009

17ம் நூற்றாண்டில் சூரியகிரகணம்:


கி.பி.17ம் நூற்றாண்டில் நடந்த சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கோயில் கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன், பழனியாண்டவர் பெண்கள் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் னோன்மணி,செல்வநாயகி, திலகவதி கொண்ட குழு பழநி பெரியநாயகியம்மன்
கோயிலில் நடத்திய ஆய்வில் சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது அறிக்கை: ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோயில் கி.பி.14ம் நூற்றாண்டில் மாலிக் காபூர்படையெடுப்பால் அழிந்தது. அதன்பின் கி.பி. 17ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் சீரமைக்கப்பட்டது. இக்காலத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் யாகசாலை சுவரில் உள்ளது. இதில் உள்ள 4 வரிகளில் 2-வது வரிசூரியகிரகணத்தை குறிப்பிடுவது (சூரிய கிறாண புண்ணியகாலத்தின்...என்ற வரி). கி.பி. 17ம் நூற்றாண்டில் நடந்த ஒரு சூரிய கிரகண தினத்தன்று பழநி பெரிய நாயகியம்மன் கோயிலுக்கு நிவந்தத்திற்காக நிலம் தானமாக நீர் வார்த்து கொடுக்கப்பட்டது என்பது கல்வெட்டின் சாரம்சம். கல்வெட்டு மூலம் கிடைக்கும் தகவல்அரசனின் ஆட்சி ஆண்டு இருந்த பகுதி சிதைந்துள்ளதால் அவர் யார்என்பது தெரியவில்லை. இதிலுள்ள எழுத்துக்களை வைத்து பார்க்கும் போது, திருமலைநாயக்கரின் காலமான கி.பி. 17ம் நூற்றாண்டு என கொள்ளலாம். அக்காலத்தினர் சூரிய கிரகணம் குறித்து முன்கூட்டியே அறிந்துள்ளதும், அன்று கோயில்களுக்கு தானம் அளிக்கும் வழக்கம் இருந்ததும் உறுதியாகிறது. புண்ணிய காலம்: மலைக்கோயில் மூலவர் கருவறையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மல்லிகார்ச்சுனராயர் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டிலும் சூரிய கிரகணம் குறித்தவார்த்தைகள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுகளும் கிரகண காலத்தை"புண்ணிய காலம்' என்றே குறிப்பிடுகிறது. ஆனால், இன்று இக்காலத்தை கெட்ட நேரம், சுனாமி ஏற்படும் நேரம் என்று சிலர் கூறுகின்றனர்தற்போதைய கிரகணம் 6 நிமிடம் 39 நொடிகள் நிகழும். இதுபோல் 360ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவேபெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டு காலம் கி.பி. 1649ம் ஆண்டாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

No comments: