Wednesday, August 8, 2012
மனம் கவரும்பொண்ட் படங்கள்
திரைப்பட உலகில் 50 வருட கால வரலாற்றைக் கொண்ட ஜேம்ஸ் பொன்ட் திரைப்படக் காட்சிகளில் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல கவர்ச்சியான ஆடை அலங்காரங்களைக் கொண்ட படக் காட்சியொன்று உள்ள ""பாபிக்கன் நிலையத்தில்'' (Barbican Centre) ) தற்போது நடைபெற்று வருகின்றது.
""ஜேம்ஸ் பொன்ட் (James Bond திரைப்படங்கள் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் முகமாகவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்காட்சிகளில் பிரபல ஹொலிவுட் நடிகையான உர்சுலா அன்ட்ரெஸ் (Ursula Andress நீச்சலுடையில் (Bikini) ) தோன்றும் படங்கள் தொடக்கம் தற்போதைய பொண்ட் நடிகர் டானியல் கிறேய் இறுக்கமான நீல நிற நீச்சலுடையில் தோன்றும் படங்கள் வரையான படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1964 இல் வெளிவந்திருந்த சீன்கொனரி ஜேம்ஸ் பொன்ட் நடித்த அஸ்டன் மார்ட்டின் டி.பி. 5 (Aston Marein ) தொடக்கம் ஈடிஞு அணணிtடஞுணூ ஞீச்தூ திரைப்படத்திலிருந்து இவ் இரண்டு படங்களும் இதில் அடங்குகின்றன.
ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் என்றுமே மறக்க முடியாத மனங்கவர் காட்சிகளாக ஆங்கில சினிமா ரசிகர்களை ஆகர்ஷித்திருந்த காட்சிகள் பலவும் துப்பறியும் நிபுணராக நடித்த ஜேம்ஸ் பொன்டின் 50 வருட கால நினைவைக் கொண்டாடும் கண்காட்சியை மேலும் நிறைத்துள்ளன. திரைப்படத்தில் கடலுக்குள் இருந்தவாறு பிரபல நடிகை உர்சுலா ஆன்டசரெஸ் வெள்ளை நிற நீச்சலுடையில் தோன்றிய படமும் ''Die Another Day' ' திரைப்படத்தில் ஹலே பெரியின் இரண்டு படங்களுக்கருகில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. அத்துடன் Thunde ball திரைப்படத்தில் நடிகர் சீன் கொனரி அணிந்திருந்த காற்சட்டை மீளுருவாக்கம் செய்யப்பட்ட நிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டதுடன் ''Casino Rogalle' திரைப்படத்தில் தற்போதைய ஜேம்ஸ் பொன்ட்டான டானியல் கிறேக் இறுக்கமான அந்த நீல நிற நீச்சலுடையில் காணப்பட்டபோது பெண் பொன்ட் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருந்ததுடன் அவர் எதிர்வரும் ஓகஸ்டில் வெளிவரவுள்ள திரைப்படத்தில் மீள தோன்றவுள்ளார். எதிர்வரும் செப்டம்பரில் இந்தக் கண்காட்சி முடிவுற்றதும், இந்த காட்சிப்படுத்தப்பப்படலமானது சர்வதேச மட்டத்தில் உலா வரப் போகின்றதாம். ஒஸ்கார் விருது பெற்ற ஆடையலங்கார பெண் வடிவமைப்பாளரான லிண்டி ஹெமிங் இது குறித்து தெரிவிக்கையில், திரைப்படத்தில் வரும் வடிவமைப்புடன் தொடர்பு பட்டதாகவே இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. வருடக் கணக்காக நாம் இத்தகைய ""ஜேம்ஸ் பொன்ட்'' திரைப்பட நடிகர் நடிகையர் பாவித்த ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் கலையம்சம் பொருந்திய ஏனைய படைப்புக்களைத் தாங்கிவரும் படக் காட்சிகளைச் சேகரித்து வந்துள்ளோம்.
ஜேம்ஸ் பொன்ட் திரைப்படமொன்றில் நீங்களும் இணைந்து கொண்டதற்கானதோர் உணர்வை இந்தக் கலையம்சங்கள் உங்களுக்குத் தந்துவிடும் வகையில் உள்ளன என்றே கூற வேண்டும் என்றார். பெரும் எண்ணிக்கையிலான பொன்ட் திரைப்பட வில்லன் மாக் பற்றிய படங்களும் கண்காட்சியை களைகட்ட வைப்பதுடன் நடிகர் ஸ்கராமங்கள் பாவித்திருந்த பொன்னிறத் துப்பாக்கி, தொப்பி ''From Russia with Love' திரைப்படத்தில் நடிகர் ரோசா கிளைப் பாவித்த சுருக்குக் கத்தி கொண்ட சப்பாத்துக்கள் பற்றிய காட்சிப்படங்களும் இவற்றிலடங்குகின்றன. ஆயினும் இந்த அரிய கண்காட்சியானது M 16 துப்பறியும் நிபுணரான ஜேம்ஸ் பொன் திரைப்படக் கலையம்சங்களுக்கு அப்பால் அதன் சிருஷ்டிக் கர்த்தாவான இயன் பிளெமிங் (Ian Fleming) தனது சொந்த அனுபவங்கள் அறிவு மற்றும் நண்பர்களை அடிப்படையாக வைத்து பற்பல கதைகளைத் தழுவி பாத்திரப் படைப்புக்களை உருவாக்கிய விதம் குறித்த விளக்கப் படங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment