Sunday, July 15, 2012
வாய்ப்புகளை தவற விட்ட ஜேம்ஸ் பொன்ட் நடிகர்கள்
துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ் பொன்ட் (James Bond)பாத்திரத்தை கடந்த 1967 இல்ஏற்று நடிப்பதற்கென பிரபல நடிகர்களான ஜோர்ஜ் லேசன்பி, (George Lazenby), ஜோன் ரிச்சாட்சன் (John Richardson), ஹான்ஸ் டீ வீரைஸ் (Hans De Vries), அந்தோனி ரோஜர்ஸ் (Anthony Rogers) மற்றும் ரொபர்ட் கம்பெல் (Robert Campbell) ஆகியோர் ரொம்ப பிரயத்தனப்பட்ட போதிலும் அவர்களால் தங்கள் பேராவல்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் போய் விட்டதென்றே கூற வேண்டும்.
இவர்களில் அவுஸ்திரேலிய நடிகர் பேஸென்பியால் ஜேம்ஸ் பொன்ட் பாத்திரத்தை இறுதியாக நிலை நிறுத்த நடிக்க முடிந்த போதிலும் அவரால் நடிக்கப்பட்ட ஒரேயொரு "பொன்ட்' பாத்திரமாகவே அது அமைந்திருந்ததெனலாம். பிரித்தானிய துப்பறியும் நிபுணர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்ற ஜேம்ஸ் பொன்ட் ஆகவும் அவர் விளங்கினார். சீன் கொனரி (Sean Connery) பியேர்ஸ் புரொஸ்னன் (Pierce Brosnan) மற்றும் ரோஜர் மூர் (Roger Moore) ஆகிய நடிகர்கள் "ஜேம்ஸ் பொன்ட்' ஆக அபாரமாக நடித்தமைக்காக, இரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கப் போகும் அதேவேளையில், 007 ஆக பாத்திரமேற்று நடிக்கும் வாய்ப்புக்களை மயிரிழையில் நழுவ விட்டோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆமாம்! எதனையும் நிதானித்து தேவையறிந்து அளவாக, மெதுவாகப் பேசும் அந்த அற்புதமான பாத்திரத்தை (துப்பறியும் நிபுணர்) ஏற்று தொடர்ந்து நடிக்கும் அரிய வாய்ப்புகளைத் தவறவிட்ட நடிகர்களின் புகைப்படங்களை ஆவணக் காப்பகமொன்று வெளியிட்டுள்ளது. கடந்த 1967 தொடக்கம் ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் நடித்திருந்த ஐந்து நடிகர்களின் புகைப்படங்களே அவை.
"One Her Majesty Seeret Service" " எனும் திரைப்படத்திற்கான "ஜேம்ஸ் பொன்ட்' பாத்திரத்தை ஏற்றி நடிக்கும் வாய்ப்பு இறுதியாக நடிகர் ஜோர்ஜ் லேஸென்பியைச் சென்றடைந்தது.
நடிகர் "சீன் கொனரியை' அடுத்து ஜேம்ஸ் பொன்ட் ஆக நடிக்க வந்த அவுஸ்திரேலிய நடிகரான அவரின் துப்புத் துலக்கும் சாதனை பற்றிய வரலாறு வேறுபாடானதாக அமைந்திருக்கலாம். எவ்வாறாயினும் "ஜேம்ஸ் பொன்ட்' பாத்திரத்தை ஏற்று நடிக்க விரும்பியிருந்த ஏனைய நால்வரில் ஒருவர் தனது பேராவலைப் பூர்த்தி செய்திருந்தால். அவரது வரலாறு வேறு விதமாக மாறியிருந்திருக்கும் என்பதில் ஐயமேயில்லை.
கடந்த 1967 இல் ""Life" " எனும் ஆங்கில சஞ்சிகைக்கென எடுக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பொன்ட் பாத்திரத்தில் நடிக்க விரும்பியிருந்த இந்த நடிகர்களின் புகைப்படங்கள் பொருத்தமான வகையில் எடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். அவற்றில் அவர்கள் ஆயுதங்காட்டிப் பயமுறுத்துவது போலவும் மார்டினியை (Martini) உறிஞ்சிக் குடிப்பது போலவும், கவர்ச்சி காட்டும் கன்னியரை, வேறொருவராலுமே செய்ய முடியாத வகையில் வசீகரித்து தனது வலையில் வீழ்த்துவது போலவும் காணப்படுவது சிறப்பம்சமாகும். ஒரு புகைப்படத்தில் பிரித்தானிய நடிகரான ஜோன் ரிச்சாட்சன் தனது சக நடிகையொருத்தியின் துப்பாக்கிக்கு எதிரே தனது முகத்தைத் திருப்பியபடி தோன்றுகின்றார். கண்ணைக் கவரும் ஏனைய புகைப்படங்கள் வரிசையில் நம்பிக்கை தரும் வகையில் ஜேம்ஸ் பொன்ட் ஆக நடித்திருந்த அந்தோனி ரோகர்ஸ் தனது காதல் உணர்வை வெளிப்படுத்தும் புகைப்படமும் அடுத்த நடிகரான ரொபர்ட் காம்பெல் தனது சக நடிகையொருத்தியுடனான முத்தக் காட்சியொன்றில் கலக்குக் கலக்குகின்றார். இறுதியாக ஜேம்ஸ் பொன்ட் ஆக நடிக்கும் தனது ஆவலைப் பூர்த்தி செய்யத் தவறியவராக நடிகர் ஹான்ஸ் டீ வீரைஸ் விளங்குகின்றார்.
தனது முப்பதுகளின் நடுப் பகுதியில் திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் அனுபவம் பெற்றிருந்த பிரித்தானிய நடிகர் ரிச்சாட்சனே, ஜேம்ஸ் பொன்ட் பாத்திரமேற்று நடிக்கவென்றே பேராவல் கொண்டிருந்த ஜோர்ஸ் லேசன்பியின் பிரதான வில்லனாக இருந்தாரெனலாம். ஆயினும் அந்த வாய்ப்பை அவர் மயிரிழையில் தவறவிட்டார்.
தற்போது 78 வயதானவராக இருக்கும் கடந்த 1994 வரை நீடித்த தனது ஏனைய டசின் கணக்கான திரைப்பட வாய்ப்புக்களால் "ஜேம்ஸ் பொன்ட்' ஆக நடிக்கும் ஆசைக்கு முழுக்குப் போட்டு விட்டிருந்தார். ஆயினும் ரோஜர் மற்றும் கம்பெல் ஆகியோரைப் பொறுத்தவரையில் இதே காரணத்தைக் கூறி விட முடியாது.Doctor Who, , அதன் பின்னர் 1986 இல்El Dorado ஆகிய படங்களில் ரோஜர் மீண்டும் நடித்திருந்தார்.
"ஜேம்ஸ் பொன்ட்' நடிப்பாற்றல் தேர்வைத் தவறவிட்ட பின்னர் அவர் திரைப்பட நடிப்புத் துறைக்கு ஒரேயடியாகவே முழுக்குப் போட்டார். அதே வேளையில் நடிகர் ரொபர்ட் கம்பெலின் நற்சாட்சிப் பத்திரங்கள் பற்றி தொலைக்காட்சி நடிகரான அவரது சகோதரன் வில்லியம் கம்பெல் உடனான உறவு தவிர்ந்த எந்தத் தகவலுமே கிடைக்காத நிலையில் அவர் என்றும் புரியாத புதிராகவே (புதிரான மனிதனாகவே) திகழ்கின்றார்.
"ஜேம்ஸ் பொன்ட்' பாத்திரத்தில் தோன்றிய ஹான்ஸ் டீ வீரைஸ், You only live twice எனும் திரைப்படத்தில் திறமையற்ற கட்டுப்பாட்டறை தொழில்நுட்பவியலாளராகவும் ஏலவே நடித்துள்ளார்.
அதன் பின்னர் நடிகர் ஜோர்ஜ் லேசன்பியின் அபார நடிப்பாற்றலால், அவரும் தேர்வில் பின் தள்ளப்பட்டார். சண்டைக் காட்சியொன்றுக்கான திரைப் பரீட்சையொன்றில் இயக்குனரின் இதயத்தில் இடம்பிடித்த லேசன்பி "On Her Majesty's Secret Service" " திரைப்பட ஜேம்ஸ் பொன்ட் (007) ஆக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இறுதியில் நடிகர்களின் திறமைகளைக் கண்டறியும் பூர்வாங்கப் பரீட்சையில் அவரும் நீக்கப்பட்டார்.
மெட்ரோநியூஸ் 13/07/12
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment