Showing posts with label சத்தம். Show all posts
Showing posts with label சத்தம். Show all posts

Monday, February 8, 2010

சத்தமில்லாதசெக்ஸ்


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விடுதியொன்றில் தங்கியுள்ள மாணவிகளுக்கு விநோதமான பணிப்புரையொன்று விடுக்கப்பட்டுள்ளது. செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது அதிகமாக சத்தமிடாதீர்கள் என்பதுதான் அந்தப்
பணிப்புரை.
இப்பல்கலைக்கழகத்தின் நிவ்ன்ஹாம் பெண்கள் கல்லூரியில் சுமார் 400 மாணவிகள் கல்வி கற்கின்றனர். இளமாணி கற்கைநெறியில் ஈடுபட்டுள்ள இம்மாணவிகள் அனைவருக்கும் அண்மையில் மின்னஞ்சல் மூலம் நிர்வாகத்தினரால் மேற்படி உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
139 வருடகால வரலாற்றைக் கொண்ட இக்கல்லூரியில் மாணவிகளின் அறையில் அவர்களின் காதலர்கள் 2 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பின் அவர்கள் வேறு அறையொன்றைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமாம்.
இத்தகைய நடவடிக்கைகள் தமக்கு இடைஞ்சலாக இருப்பதாக கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 30 மாணவிகள் நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்ததையடுத்தே அனைவருக்கும் பொதுவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மூலமான அறிவுறுத்தலை வாசித்த மாணவிகள் பலர் தம்மை இலக்காகக் கொண்டே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக கருதுவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்கவிடவேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
20 வயதான மாணவியொருவர் இது குறித்து கூறுகையில்,
மற்றவர்கள்
அதையெல்லாம் செவிமடுக்கிறார்கள் என்று அறிவது மிகவும் சங்கடமானது. விடுதி அறையின் சுவர்கள் மெல்லியவை என்பதை மறந்துவிடுகிறோம் எனக் கூறுகின்றனர்