Tuesday, August 24, 2010

மிஸ் மெக்சிகோ ஜிமெனாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம்







மிஸ் மெக்சிகோ ஜிமெனா நவரட்டுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்துள்ளது. 2வது இடம் ஜமைக்கா அழகிக்கும், 3வது இடம் ஆஸ்திரேலிய அழகிக்கும் கிடைத்தது. இந்தியாவுக்கு ஏமாற்றம் கிடைத்தது.
லாஸ் வேகாஸில் நடந்த இந்த கண்கவர் போட்டியில் 83 அழகிகளின் குவியிலிருந்து மிஸ் மெக்சிகோ அழகியைத் தேடி பட்ட வாய்ப்பு தேடி வந்து தலையில் அமர்ந்து கொண்டது.
22 வயதேயான ஜிமெனா பளிச்சிட்ட புன்னகை, நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற ஸ்டெபானியா பெர்னாண்டஸ் முடி சூட்டினார்.
பட்டம் வென்ற பின்னர் ஜிமெனா செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பெற்றோரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளனர் என்றார் பொங்கி வந்த மகிழ்ச்சியுடன்.
இன்று இன்டர்நெட்டை அனைவரும் கட்டுப்பாடில்லாமல் பார்க்கிறார்கள். இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜிமெனா பதிலளிக்கையில், குழந்தைகள் இன்டர்நெட்டில் என்ன பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர்தான் கண்காணிக்க வேண்டும். அது மிக அவசியம் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இன்டர்நெட் தவிர்க்கப்படக் கூடியது என்று நான் நினைக்கவில்லை. அது அவசியமானது. எனவே தவிர்க்க முடியாது. கட்டுப்பாட்டை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நமது குழந்தைளுக்கு நமது குடும்பம் குறித்தும், குடும்ப மதிப்புகள் குறித்தும் பெரியவர்கள் கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும் என்றார்.
2வது இடத்தைப் பிடித்த மிஸ் ஜமைக்கா அழகியின் பெயர் என்டி பிலிப்ப்ஸ், 3வது இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலிய அழகி ஜெஸ்னிடா கேம்பல்.
தனது 15வது வயதிலிருந்து ஜிமெனா மாடலிங் செய்து வருகிறாராம். மெக்சிகோவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற 2வது அழகி என்ற பெருமையும் ஜிமெனாவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 1991ம் ஆண்டு லூபிடா ஜோன்ஸ் பட்டம் வென்றிருந்தார்

No comments: