Wednesday, June 2, 2010
உதடுகள் இரண்டு....முத்தமோ பல
கேட்டவுடன் ஜில்லென்று உள்ளே பூ பூக்க வைக்கும். இந்த முத்தம் ஒரு மனிதனை அடியோடு மாற்றிப் போடக் கூடிய வல்லமை பெற்றது.
மன அழுத்தத்தைக் குறைக்க, பதட்டத்தைக் குறைக்க, புத்துணர்ச்சி பெற என ஏகப்பட்ட வேலைகளைச் செய்கிறது முத்தம் என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
ஒரு நிமிடம் வரை நீளமான முத்தம் கொடுத்தால், நமது உடலில் 20 கலோரி வரை குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே முத்தம் என்பது அன்புப் பரிமாற்றம் மட்டுமல்லாமல், அட்டகாசமான ஆரோக்கிய டிப்ஸாகவும் உள்ளது.
இப்படிப்பட்ட முத்தத்தை பல வகைகளாக பிரித்து வைத்துள்ளனர் நிபுணர்கள். ஒருவர் முத்தமிடுவதை வைத்து அது எப்படிப்பட்ட முத்தம், எந்த வகை முத்தம் என்பதை கண்டுபிடித்து விட முடியுமாம்.
அதையும்தான் கொஞ்சம் பார்ப்போமே!
கத்துக்குட்டி கிஸ்...
முதல் முறையாக முத்தமிடுவோரிடம் ஒருவிதமான பதட்டம் இருக்கும். அவர்கள் கொடுக்கும் முத்தம் ஆழமாக இருப்பதை விட அவசர கதியில் இருக்கும். ஜஸ்ட் உதடுகளை 'டச்' செய்து விட்டு 'டக்'கென பிரிந்து போய் விடத் துடிப்பார்கள். இதை பிகின்னர் முத்தம் என்கிறார்கள்.
இன்னொரு வகை உண்டு. இது சற்று ரசித்து, ருசித்துத் தரக் கூடியது. இந்த முத்தத்தில் அவசரம் இருக்காது. அதேசமயம், நல்ல ஆழமும் இருக்காது. ஆனாலும், நிதானம் நிறையவே இருக்கும். உதடுகள் உரசிக் கொண்டிருக்கும்போது கைகள் வேறு எங்காவது விளையாடிக் கொண்டிருக்கும். இந்த முத்தம் நமது செக்ஸ் உணர்வுகளைத் தூண்ட உதவுமாம்.
'சிப்' கிஸ்..
இது சற்று விளையாட்டுத்தனமானது. பிடித்த குளிர்பானத்தை குடித்து விட்டு முத்தத்திற்கு வருவார்கள் ஆண்கள். முத்தத்தின் இனிமையுடன், உதடுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் குளிர்பானத்தின் இனிமையும் சேர்ந்து டபுள் ஸ்டிராங்காக இருக்குமாம்.
டாக்கிங் கிஸ்...
வழக்கமாக முத்தமிட்டால் சத்தம் வரும். ஆனால் இந்த முத்தத்தின்போது பேச்சு வரும். அதாவது எதையாவது முனுமுனுத்துக் கொண்டே உதடுகளில் விளையாடுவது இந்த முத்தத்தின் வகை. உதடுகள் என்றில்லாமல் காது மடல்கள், கன்னங்கள் என உணர்ச்சிகளை அதிகம் தூண்டக் கூடிய இடங்களாகப் பார்த்து குறி வைத்து கொடுப்பார்களாம் இந்த முத்தத்தை. இது செக்ஸ் மூடைக் கிளப்ப ரொம்ப உபயோகப்படுமாம்.
'டீஸர்' கிஸ்...
காது, முகம், கைகள் என உடலின் முக்கியப் பகுதிகளை உதடுகளால் நெம்புவது போல கொடுக்கப்படும் முத்தம் இது. கடியும், பிடியுமாக இருக்கும் இந்த கலவை முத்தமும், பெண்களின் உணர்வுகளைத் தூண்ட ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றாம். ஆனால் இந்த வகை முத்தத்தை கொடுப்போர், உதடுகளை மட்டும் கண்டுக்கவே மாட்டார்கள். மற்ற இடங்களுக்கு மறக்காம்ல் விசிட் அடித்து விடுவார்கள்.
ஆவேச முத்தம்...
பெயருக்கேற்ப, இது கொஞ்சம் வேகமானது. முகத்தை ஏந்திப் பிடித்தபடி படு ஆழமாக கொடுக்கப்படும் முத்தம் இது. உதடுகளுடன் உதடுகளைப் பொருத்தி அழுத்தத்துடன் கொடுக்கப்படும் இந்த முத்தம், உணர்வுகள் உச்சத்திற்குப் போகும்போது கொடுக்கப்படுமாம்.
இந்த முத்தம் சொல்லும் சேதி என்னவென்றால் - நான் 'ரெடி', நீயும் ரெடியா என்பது.
இது கொஞ்சம்தான், இப்படி நிறைய வெரைட்டிகள் இருக்கிறதாம் முத்தத்தில். நம்ம ஊர் சினிமாக்களில், கொய்யாப் பழத்தை ஹீரோயினும், ஹீரோவும் ஆளுக்குப் பாதி கடித்தபடி கொடுத்துக் கொள்வார்களே, அது எந்த வகை முத்தம் என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லலாமே...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment