Tuesday, February 16, 2010

செக்ஸை விரும்பாத பெண்கள்!


35 வயதைத் தாண்டிய பெண்களில் கணிசமானவர்கள் செக்ஸ் உறவை விட்டு விலகிப் போய் விடுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் நான்கில் ஒருவர் செக்ஸ் வாழ்க்கையை விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளனராம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்தியவர்களில் ஒருவரான கொலீன் நோலன் கூறுகையில்,
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 28 சதவீதம் பேர் காதல், காமம் என்பதெல்லாம் பழைய கதை என்று கூறினர்.
35 முதல் 64 வயதுக்குட்பட்ட 745 பெண்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. அதில் குழந்தைப் பேறு இல்லாத பெண்களிடம், குழந்தை பெற்ற பெண்களை விட ஆர்கசம் அதிகம் இருப்பதாக தெரிய வந்தது.
41 சதவீதம் பேர் அடிக்கடி தங்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
ஒரு குழந்தை வைத்துள்ள தாய்மார்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே முழுமையான திருப்தியை செக்ஸ் மூலம் அடைந்ததாக கூறினர்.
2 குழந்தைகளுக்குத் தாயான பெண்களில் 14 சதவீதம் பேர் ஓரளவு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாக தெரிவித்தனர்.
பகுதி நேரமாக வேலை பார்க்கும் பெண்களில் 67 சதவீதம் பேருக்கு அதிக அளவில் ஆர்கசம் வருவதாக தெரிவித்தனர். முழு நேர வேலையில் உள்ள பெண்களில் 57 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம்.
மெனோபாஸ் பயம் பெண்களிடையே அதிக அளவில் உள்ளதாம். 42 சதவீதம் பெண்கள் இதை நினைத்து தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக குறிப்பிட்டனர்.
நடுத்தர வயது முதல் முதிய வயதையொட்டிய பெண்களுக்கு பல்வேறு வகையான உடல் நலக் கோளாறுகள் காணப்படுகின்றன. இருப்பினும் இதை யாரிடமும் போய்ச் சொல்ல அவர்கள் விரும்புவதில்லை.
காரணம், தயக்கம்தான்.
அதேபோல 35 வயதைத் தாண்டி விட்ட பின்னர் செக்ஸ் வாழ்க்கையில் பெண்களுக்கு ஒருவித அலுப்பு வந்து விடுவதும் தெரிய வந்துள்ளது என்றார் நோலன்.

4 comments:

இராஜ ப்ரியன் said...

என்னை பொறுத்தவரை காதலும் காமமும் எந்த வயதிலும் அடங்காதது.. அதுவும் பெரும்பாலான ஆய்வுக் கணக்கீடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்களிடையே மேற்கொள்ளப் படுகிறது. அது எல்லா இடத்து சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு பொருந்தாது. இதுமட்டுமில்லாமல் வர்க்க பேதம் வேறு அவரவர்களின் விருப்பு வெறுப்பை தீர்மானிக்கும். இந்த கருத்து என்னளவில் தோன்றியது. சின்னப்பையன் என்பதால் அதில் அவ்வளவாக அனுபவமில்லை. ஒருவேளை திருமணமாகியிருந்தால் என் மனைவிக்கும் 35 வயதுக்கு மேல் தாண்டி இருந்தால் அவளிடமிருந்து நான் உணர்ந்திருக்க முடியும். என் மனைவிக்கு 100 வயது ஆனாலும் சரி அவளை முதல் நாள் பார்த்த மாதிரியே பார்ப்பேன்.

Chittoor Murugesan said...

இந்த உலகில் எவனும் எவனை போன்றவனும் அல்லன். எவளும் எவளை போன்றவளும் அல்லள். சர்வே என்பதெல்லாம் ச்சும்மா கண் துடைப்புத்தான். விஞ்ஞான பூர்வமன உடால்ஸ்.

செக்ஸ் என்பது வெறுமனே மனம்,உடல் ,வயதை பொருத்ததல்ல அதனை எத்தனையோ ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் செய்யும்

வாழ்த்துகள்

வானதி said...

இராஜ ப்ரியன் said...
என்னை பொறுத்தவரை காதலும் காமமும் எந்த வயதிலும் அடங்காதது.. அதுவும் பெரும்பாலான ஆய்வுக் கணக்கீடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்களிடையே மேற்கொள்ளப் படுகிறது. அது எல்லா இடத்து சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு பொருந்தாது
உண்மைதான்.சித்தூர் முருகேஸின் பின்னூட்டமும் அருமையானது.
வானதி

வானதி said...

சித்தூர்.எஸ்.முருகேசன் said...
இந்த உலகில் எவனும் எவனை போன்றவனும் அல்லன். எவளும் எவளை போன்றவளும் அல்லள். சர்வே என்பதெல்லாம் ச்சும்மா கண் துடைப்புத்தான். விஞ்ஞான பூர்வமன உடால்ஸ்.

உங்கள் கருத்து சரியானது.
வானதி