Sunday, May 13, 2012
தலை கீழாக நிர்மாணிக்கப்பட்ட அதிசய சுற்றுலா விடுதி
எமது சமூகத்தில் வீடொன்றைக் கட்டுவதெனில் நாம் படும் பாடு குறித்து சொல்லவே தேவையில்லை. தரையில் அடித்தளம் இடுதல் தொடக்கம் கூரைபோடுவது வரையிலான நிர்மாண வேலைகளுக்கு நாம் அதிகளவு பணத்தைச் செலவிடும் அதேநேரம் மனித சக்தியையும் அதிகம் செலவிட நேரிடும்.
பலதரப்பட்ட கட்டிட நிர்மாணத் தொழிநுட்பத்துடன் கூடிய அபூர்வமான சுற்றுலா விடுதியொன்று ஐரோப்பிய நாடான அவுஸ்திரியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் என்னதான் ஆச்சரியம் என்கிறீர்களா? ஆமாம்! காரொன்று நிறுத்தப்பட்டுள்ள கராஜ் ஒன்றைக் கூட தனது முகட்டில் கொண்டு தலை கீழான நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன சுற்றுலா விடுதியில் பயணிகள் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. மேலோட்டமாக இதனை நாம் பார்க்கும் போதும் இந்த சுற்றுலா விடுதியானது அமானுஷ்ய பலம் வாய்ந்த ”ழற்காற்றினால் வேருடன் பிடுங்கி எறியப்பட்டு அதன் கூரையில் நாட்டப்பட்டுள்ள ஒன்றாகவே காட்சியளிக்கின்றது. விநோதமான முறையில் இந்த வீடு இவ்வாறு தான் கட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பிரதான கட்டடக்கலைஞர்களான ஐரெக் குளோவக்கி மற்றும் ரொஸான்ஸ்கி ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான வீட்டின் வெளிப்புறத்தில் உள்ளவாறு உள்ளேயும் அனைத்து தளபாட உபகரண வசதிகள் நிறைந்ததாகவே அதாவது தலைகீழான நிலையில் கராஜ் ஒன்றினுள் காரொன்று நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய தளபாட வசதிகளும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
அவுஸ்திரியாவின் இன்ஸ்புரு நகருக்கு
15 மைல்கள் மேற்கே அமைந்துள்ள
டேர்ஸன்ஸ் நகரத்திற்கான இத்தகைய
தலைகீழாகக் காட்சி அளிக்கும் சுற்றுலா விடுதியை உருவாக்கித் தருமாறு மேற்குறித்த கட்டிடக் கலைஞர்கள் இருவரும் வேண்டப்பட்டிருந்தனராம். போலந்து நாட்டைச் சேர்ந்த இந்த அமானுஷிய கட்டிடக் கலைஞர்கள் இருவருக்கும் இந்த விடுதிக்கான விபரங்கள் அடங்கிய வீட்டுத் திட்டத்தை வடிவமைக்க மட்டும் எட்டு மாதங்கள் எடுத்துள்ளது.
வானத்தில் தலைகீழாகத் தொங்கும் தடை செய்யப்பட்டுள்ள தலைவாசலில் விருந்தினர்கள் பொழுது போக்குக்கென நடைபயிலலாம் என்பதுடன் மேல் மாடி சாளரத்தின் ஊடாகவே அவர்கள் உள்ளே நுழையுமாறு வரவழைக்கப்படுகின்றனர்.
கூரை இருக்கவேண்டிய அடித்தளங்களையும் தளமொன்றின் எஞ்சிய பாகங்களையும் தொலைவில் இருந்துக் கூடஉங்களால் பார்க்க முடியும்.
உள்ளே வருகை தரும் விருந்தினர்கள் முகட்டிலிருந்து தலைகீழாக தொங்கும் மரச்சாமான்களுடனான குளியலறையொன்றை உற்றுப் பார்த்த வண்ணமேயிருப்பர். அத்துடன் இந்த அபூர்வ சுற்றுலா விடுதியின் தலைகீழான நிலையின் அறுவடையைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள புவியீர்ப்பு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த ஆச்சரியம் தரும் கராஜையும் நீங்கள் தரிசிக்கலாம்.
சிறுவர்களுக்கான படுக்கையறைகள் கூட முகட்டில் விளையாட்டுச் சாமான்கள் பரவிய நிலையில் நிஜரூபம் வாய்ந்தவையாகவே காணப்படுகின்றன. இவை மட்டுமா என்ன? இயங்கு நிலையில் உள்ள மின் அடுப்பொன்று,
குளிர்ச்சாதனப்பெட்டி உள்ளிட்ட எடுப்பான தோற்றங்கொண்ட சமையலறை ஒன்றும் இந்த விடுதியில் காட்சியளிக்கின்றது. அத்துடன் வரவேற்பு மண்டபத்தில் தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றும், நிலத்தை நோக்கிய புகை போக்கியுமுள்ளன. இந்தத் தலை கீழான சுற்றுலா விடுதி விருந்தினர்களுக்கென இந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் வருகை தருவோரைக் கவரும் விதத்தில் அனை த்து அடிப்படை வசதிகளும் தலைகீழாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிசய விடுதியை பிராந்தியத்தில் உள்ள அனை வரும் அலைகடலென திரண்டு வந்து பார்த்த வண்ணமுள்ளனர்.
மெட்ரோநியூஸ் 06/05/12
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment