Saturday, December 7, 2013
அச்சத்தில் "உலக சாம்பியன்' ஸ்பெயின்
மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, "நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது.
"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது உலக கோப்பை தொடர், வரும் 2014, ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வெளியானது.
மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 32 நாட்களில் 64 போட்டிகள் நடக்கும். லீக் முறையில் நடக்கும் போட்டிகள் முடிந்த பின், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், "நாக்-அவுட்' ("ரவுண்டு-16') சுற்றுக்கு முன்னேறும். ரியோ டி ஜெனிரோவில் பைனல் (ஜூலை 13) நடக்கும்.
பிரேசில் சாதகம்:
ஜூன் 12ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் ("ஏ' பிரிவு), தொடரை நடத்தும் பிரேசில், குரோசியா அணிகள் மோதவுள்ளன. சொந்தமண் என்பதால் பிரேசில் அணி இம்முறை கோப்பை வெல்லும் என, நம்பப்படுகிறது.
ஸ்பெயினுக்கு சிக்கல்:
"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் அணி, இம்முறை "பி' பிரிவில் உள்ளது. இத்துடன் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகளும் உள்ளன. கடந்த 2010ல், லீக் சுற்றில் சிலி அணியை சிரமப்பட்டு தான் ஸ்பெயின் வென்றது.
தவிர, ஸ்பெயின் அணி தனது முதல் போட்டியில் (ஜூன் 13) , 2010 தொடரின் பைனலில் வீழ்த்திய நெதர்லாந்து அணியைத் தான் சந்திக்கிறது.
வீரர்கள் காயம்:
இதுகுறித்து முன்னணி பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியில், "பி' பிரிவை "குரூப் ஆப் டெத்' என தெரிவித்துள்ளன. அணியின் முன்னணி வீரர்கள் இனியஸ்டா, அலோன்சோ, ஜாவி ஹெர்னாண்டஸ் காயத்தால் அவதிப்படுவதும் பலவீனம் தான்.
கோல் கீப்பர் கேப்டன் இகர் கேசிலாஸ், ரியல் மாட்ரிட் அணியில் மாற்று வீரராகத் தான் உள்ளார். சமீபத்திய போட்டிகளில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ஸ்பெயின். இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த கான்பெடரேஷன் தொடர் பைனலில், ஸ்பெயின் அணி, பிரேசிலிடம் 0-3 என, வீழ்ந்தது.
இதுபோன்ற காரணங்களால் ஸ்பெயின் அணி, அடுத்த சுற்றுக்கு செல்லவே கடுமையாக போராடும் நிலை தான் <உள்ளது. இதனால், மீண்டும் உலக கோப்பையை தக்கவைப்பது கடினம் தான்.
பிரிவு "ஏ' பிரிவு "பி' பிரிவு "சி' பிரிவு "டி'
பிரேசில் ஸ்பெயின் கொலம்பியா உருகுவே
குரோசியா நெதர்லாந்து கிரீஸ் கோஸ்டாரிகா
மெக்சிகோ சிலி ஐவரி கோஸ்ட் இங்கிலாந்து
காமரூன் ஆஸ்திரேலியா ஜப்பான் இத்தாலி
பிரிவு "இ' பிரிவு "எப்' பிரிவு "ஜி' பிரிவு "எச்'
சுவிட்சர்லாந்து அர்ஜென்டினா ஜெர்மனி பெல்ஜியம்
ஈகுவடார் போஸ்னியா போர்ச்சுகல் அல்ஜீரியா
பிரான்ஸ் ஈரான் கானா ரஷ்யா
ஹோண்டுராஸ் நைஜீரியா அமெரிக்கா தென் கொரியா
Subscribe to:
Posts (Atom)