Wednesday, March 11, 2009

லிங்கனின் கைகடிகாரத்தில் ரகசிய செய்தி



அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கனின் தங்க கைகடிகாரத்தில் அமெரிக்க சிவில் போர் குறித்த ரகசிய செய்தி செதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் 16வது அதிபராக ஆப்ரகாம் லிங்கன், கடந்த 1860ம் ஆண்டு பதவி ஏற்றார் 1861ம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடந்தது. அதிருப்தியாளர்கள் கரோலினா மாகாணத்தில் உள்ள சம்ப்டர் கோட்டை மீது தாக்குதல் நடத்தினர். இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில்ஆப்ரகாம் லிங்கனின் தங்க கைகடிகாரத்தை பழுது பார்த்த ஜோனாதன்தில்லான் என்பவர், "சம்ப்டர் கோட்டை போராளிகளால் தாக்கப்பட்டது நன்றி கடவுளே! அரசு எங்களிடம் உள்ளது' என்ற ஆங்கில வாசகத்தைகடிகாரத்தினுள் எழுதியுள்ளார். அவர் குறித்த தேதி ஏப்.,13, 1861 ஆனால், இந்த வாசகம் எழுதப்பட்டது ஆப்ரகாம் லிங்கனுக்கு தெரியாது இந்த வாசகத்தை எழுதியதாக 45 ஆண்டுகள் கழித்து தில்லான்"நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் தெரிவித்திருந்தார்
அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆப்ரகாம் லிங்கனின் கைகடிகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள இந்த வாசகத்தை திறந்து பார்க்க வேண்டும், என தில்லானுடைய எள்ளுபேரன் சமீபத்தில் மியூசியத்தின்அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மியூசியத்தில் உள்ளகடிகாரம் திறந்து பார்க்கப்பட்டது. அதில் இந்த வாசகம் செதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

No comments: